Blog Index
The journal that this archive was targeting has been deleted. Please update your configuration.
Navigation
Saturday
Nov182017

தமிழில் எழுதும் சந்தோஷம்

எல்லோருக்கும் வணக்கம்! நான் தமிழில் எழுதி பல வருடங்கள் ஆகின்றது. முதலில் PC'ஐ உபயோகித்து கொண்டு இருந்தேன். அப்போது "Baraha" மூலம் எளிதாக தமிழில் எழுதமுடிந்தது. புதிய வேலை. புது கம்ப்யூட்டர். Mac'இல் Baraha வேலை செய்யவில்லை.  அதோடு தமிழில் பிளாக் எழுதுவதும் நின்றுவிட்டது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு தமிழ் புத்தகத்தை படித்தேன். மறுபடியும் தமிழில் எழுதவேண்டும் என்று தோன்றியது.  Google  உள்ளீட்டு கருவியால் இதை எழுதுகிறேன். இப்படி ஒரு கருவி இருப்பது தெறியாமல் போனது! இதை சுட்டிக்காட்டியதற்கு ஸுஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றி! 
கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ஐம்பது முறை சீனா சென்று வந்துள்ளேன். வெறும் விமானம், ஏர்போர்ட், ஹோட்டல், அலுவுலகம் மட்டுமே பார்த்திருந்தேன். இருந்தாலும் பலவித மக்களோடு பேசி பழுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல புது நண்பர்கள். சீனாவை பற்றி அமெரிக்காவில் பேசப்படும் சம்பவங்கள், நியூஸ், முக்கால் வாசி பொய் என்று உணர்ந்தேன். இந்தியாவை போல சீனாவும் பெரிய நாடு. அங்கும் பல மாநிலங்கள். நமக்கு எல்லோரும் சீனராக தெரிந்தாலும், அவர்களுக்கு வேறுபாடுகள் பெரிதாக தெரிகிறது. ஒரு உதாரணம்... ஒரு இந்தியா ரெஸ்டூரண்ட்டுக்கு என்னோடு வேலை பார்ப்பவர்களை அழைத்து சென்றேன். அங்கே எங்களுக்கு வந்த Waitress கிட்டத்தட்ட ஆறு ஆடி  உயரமாக இருந்தாள். உடனே என் நண்பன் அவளை கேட்ட கேள்வி? "நீ வடசீனாவிலிருந்துதானே வந்திருக்கிறாய்? எந்த பிரதேசம்?" அதற்கு அவள் "இல்லை, நான் ஷாங்காய்யை சேர்ந்தவள் தான்!" என்றாள். எனக்கு எல்லாரும் ஒரே சீனர்களாகத்தான் தெரிந்தார்கள். இந்த பயணங்களில் வேலை ஒருபுறம். சீனாவை பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொள்வது மறுபுறம். 
நான் நினைத்ததுபோல சீனாவில் எல்லோரும் எப்போதும் அரசாங்கத்துக்கு பயந்து வாழ்வதில்லை! மக்கள் நகரங்களில் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். என்னோடு வேலை பார்க்கும் நண்பர்களின் பெற்றோர் கிராமத்தில் இருக்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக இருப்தக தெரிகிறது. அவர்களது பெரிய அனுதாபங்கள்? 
1. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுகொள்ள முடியும் என்ற அரசாங்க கட்டுப்பாட்டினால், தன்  ஒரே குழந்தையை விபத்திலோ, போரிலோ, அழகா மரணத்திலோ இழந்தவர்கள், முதுமையில் அவர்களை கவனிக்க யாரும் இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிகிறது. இதில் பல பெற்றோர் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்கள். அப்போது சீனாவில் புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கெடுதல் என்று மக்களுக்கு பரவலாக தெரியவில்லை. இப்போது புற்றுநோய் பலரை பாதிக்கிறது. ஆஸ்பத்திரியில்,புற்றுநோய் சிகிச்சைக்கான யந்திரங்கள் இருபத்துநாலு மணி நேரமும் ஓடுவதாக கூறுகிறார்கள்! 
2. இளைய (நடு தலைமுறை- Gen -X ) தலைமுறை முழுதும் கம்யூனிஸ்ட் புரட்சிக்கு பின், 4-5 வருடங்கள் சீரான கல்வி இல்லாமல் இருந்து அதன் பிறகு படித்து, இப்போது வாய்ப்புக்காக நகரங்களில் சென்று குவிந்துள்ளார்கள். வருடத்திற்கு இரு முறை (கோல்டன் வாரம், சீன புத்தாண்டு வாரம்) மட்டுமே கிராமத்திற்கு சென்று பெற்றோருடன் பழகும் வாய்ப்பு. இதில் பலருக்கு அவர்களின் பெற்றோரின் நண்பர்கள் குழந்தைகள்தான் தம்பி தங்கை, அண்ணா அக்கா. 
3. இப்போது சீனா அரசாங்கம் இந்த ஒரே குழந்தை கட்டுப்பாட்டை ரத்து செய்துள்ளது. அதில் சிலருக்கு மன வருத்தம். 
4. காற்று மற்றும்  தண்ணீர் சுத்தம் அவ்வப்போது கேள்வி குறியாக உள்ளதாகவும், அரிசியல் அதிகாரிகள் வருவதற்கு முன்பு அனைத்து அலைகளையும் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்போது திடீர் என்று நீலமான வானம், வானத்தில் மேகம், இதெல்லாம் பார்க்கும் போது இதை மாற்ற பொது மக்களால் என்ன செய்யமுடியும், ஏதாவது செய்ய முடியுமா? என்ற ஏக்கம்.. 
இந்த நான்கு விஷயங்களை தவிர அவர்கள் வேறெதைப்பற்றியும் புலம்புவதில்லை. 
என் சீன நண்பர்கள் பெருமிதப்படும் விஷயங்களும் பல ..
1. ஆண்டுக்கு ஆண்டு, தினசரி வாழ்க்கை அவர்களுக்கு எளிதாவது எல்லோருக்கும் தெரிய வருகிறது. ஒன்பதே மாதங்களில் புது "highway". ஒரே வருடத்தில் புது ரயில் ஸ்டேஷன், அதிவேகமான இன்டர்நெட், பெட்டி கடையிலிருந்து பெரிய மால் வரை எல்லோரும் போனிலேயே "Alipay" உபயோகித்து சாமான் வாங்குவது..
2. மருத்துவ மனைகளில் உள்ளே சென்று வெளியே வரும் நேரம் குறைந்துள்ளது...மருந்து என்ன விலையானாலும் அவர்களுக்கு சலுகை விலையில் கிடைப்பது
3. சீனாவை மத்த நாடுகள் ஒரு சூப்பர் பவராக மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிற பெருமிதம்!
இதை எல்லாம் கேட்கும்போது நான் நினைப்பது?
என் அம்மா சொன்னது "சென்னையில் சில தெருக்களில் முதியோர் மட்டுமே உள்ளனர். குழந்தைகள் எல்லோரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று எங்கெங்கோ போய் விட்டார்கள். summer  vacation  பொது மட்டும் தெரு காலைகட்டி இருக்கிறது."
அமெரிக்காவில் வயதானவர்களுக்கும் இதே கதி தான்! சீனாவில் நடப்பது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அமெரிக்காவில் சின்ன உபாதை வந்தால் மருத்துவ செலவு சமாளிக்க முடியும். பெரியநோய் ஏதேனும் வந்தால் குடும்பமே தெருவுக்கு வரும் வாய்ப்பு அதிகம்!
அமெரிக்கா, சீனா, இந்தியா.. இந்த மூன்று நாடுகளிலும் இப்போது "nationalism" தலைதூக்கியுள்ளது. இதில் சீன மற்றும் அமெரிக்காவில் "protectionism" சேர்ந்து காணப்படுகிறது!
இது எங்கே பொய் முடியும் என்று எல்லோருக்கும் தெரியும்!  
அண்மையில், விமான பயணங்களில் நான் படம் பார்ப்பதை விட்டுவிட்டு புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். வரலாறு, மானுடவியல், பொருளாதாரம் போன்ற தலைப்புகளை மையமாக கொண்ட புத்தகங்கள். இந்த புத்தகங்களில் எல்லாம் சில கோட்பாடுகள் பலமுறை குறிப்பிட படுகின்றன. 
அதை அடுத்த போஸ்ட்டாக எழுதுகிறேன்.. 
Monday
Apr142014

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

நேரம் போவதே தெரியவில்லை. திரும்பி பார்க்கும் முன்னே இன்னொரு புது வருடம் பிறந்து விட்டது!
என் இரண்டடு கண்மணிகளும் அழகாக அலங்காரம் செய்து கொண்டு புது வருடத்தை வரவேற்றனர். சங்கீதாவும் சமயலறையில் ஒரு "marathon" நடத்தினாள். அருமையான சாப்பாட்டை ருசித்ததில் எனக்கு குறைந்த பட்சம் ஒரு 4-5 பவுண்டு கணம் கூடி இருக்கும். அதை சரிகட்ட, எப்போதும் போல 90 நிமிடம் யோகா செய்வதற்கு பதிலாக மூன்று மணி நேரம் யோகா செய்தேன்.

ஒரு வாரம் வெளிஊர் பயணம். 13 மணிநேரம் விமான பயணம். ஏற்கனவே சின்ன சைஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் என் பக்கத்தில் ஒரு பெரிய மனிதன். பெரிய என்று சொன்னது அவரது சரீரத்தை! அவர் அந்த சீட்டில் உட்கார்ந்தார் என்று சொல்லுவதை விட சீட்டில் படர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். முதுகு வலி பின்னி விட்டது! போயிங் 74(+)7 மற்றும் Airbus விமானம் செய்வோர்க்கு ஒரு சிரிய விண்ணப்பம்! தயவு செய்து இரு சீட்டுகளுக்கு நடுவே உள்ள தடுப்பை நகற்ற முடியாமல் பண்ணி விடுங்கள். ஒல்லி குச்சியாக இருக்கும் எனக்கே இவ்வளுவு பிரச்சனை என்றால், அவருக்கு என்னை விட கஷ்டமாக இருந்திருக்கும். பாவம்! வழக்கம் போல, எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்..

திரும்ப விஷயத்துக்கு வருவோம். புது வருட பிரப்பு ! குழந்தைகள் அழகாக அலங்காரம் செய்து கொண்டாடினார்கள். புது வருடத்தை முன்னிட்டு நான் ஒரு "Bose Ear Phones"-ஐ எனக்கே அன்பளிப்பாக கொடுத்தேன்! அடுத்த விமான பயணத்தின் பொது, உட்கார இடம் இல்லை என்றாலும் சத்தமாவது குறையும்! Bose'க்கும் புது வருடத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை கேட்காதீர்கள்! விநாயக சதுர்த்திக்கும் "Run" படத்திற்கும் என்ன சம்பந்தமோ, அதே சம்பந்தம் தான்!

இதில் உண்மையாக கொண்டாடக்கூடிய விஷயம் என்னவென்றால், என் குட்டீஸ் இன்றும் நான் கெஞ்சி கேட்டால், போடோவுக்கு போஸ் குடுக்க தயாராக இருக்கிறார்கள்! 

சின்னவளின் தோடுகளை காட்டியே ஆகவேண்டும்!சங்கீதாவின் நண்பன் இந்தியாவிலிருந்து வாங்கி  வந்த "டெர்ர கோட்டா" தோடுகள்! 


இந்த படங்களை பார்க்கும்போது, நான் ஒரு போட்டோவிலும் இல்லையே என்று ஒரு ஏக்கம்! வரும் சில நாட்களில் ஓரிரண்டு எடுத்தால் போச்சு! 

அனைவருக்கும் எங்களுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கு சாந்தமும் சந்தோஷமும் நிரம்பிய புது வருடத்திற்கான மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(English Version is here)
Thursday
Jun072012

ஒரு வார்த்தை ஒரு லட்சம் 

என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சி "ஒரு வார்த்தை, ஒரு லட்சம்"

இருவருக்கும் அந்த நிகழ்ச்சியில் வரும் பெரும்பாலான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. இருந்தாலும் மும்முரமாக பார்பார்கள். இருபது வார்த்தைகளில் ஒன்றிரண்டு தெரிந்தாலும் அவர்களுக்கு ஒரு அலாதியான சந்தோஷம்!

அதுவும் கலிபோர்னியா தமிழ் அகாடமியில் வருடம்  தோறும் ஞாயிற்றுகிழமை அன்று தமிழ் கற்று கொள்வதின் ஒரு நோக்கம்? இந்த நிகழ்ச்சியில் வரும் வார்த்தைகள் தெரிகிறதா என்று பார்ப்பது!

ஆங்கிலத்தில் "தபூ" என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. நாங்கள் குடும்பமாக ரசித்து விளையாடும் "கேம்". தமிழிலும் அதே போல ஒரு விளையாட்டு இருந்தால்....

கடந்த இரு வாரங்களாக நாங்கள் "one word one million" என்று ஒரு கேம் விளையாட  ஆரம்பித்து இருக்கிறோம். கூடிய சீக்கிரம் அதை வீடியோ ப்ளாக் செய்கிறேன்!

Sunday
Feb282010

ஒரே ஒரு போஸ்

நான் : ஒரே ஒரு "போஸ்" குடு டா செல்லம் !

என் மகள் :


நான் : சரி.. இதுவும் ஒரு "போஸ்" தான்!

=============

Visithra version :

Me : please give me a pose!

Daughter: poses like KALi!

Me : ok.. this is also a Pose!

.

Saturday
May102008

மனிதன் என்பவன்

அன்மயில் "தசாவதாரம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டீ. வி.யில் பார்தேன்.

அதில் கலைஞரை என்ன சொல்லி அறிமுகம் செய்தார்கள் தெரியுமா?

"தமிழ் திரையுலகை காக்கும் கடவுள்!"

நாத்திகம் பேசும் கலைஞர் கடவுளே ஆகிவிட்டார்!

கடவுளை நம்புவதை விட மனிதனை நம்பு என சொன்னவருக்கே இந்த கதி!

கலைஞருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

=======================
visithra version:

anmaiyil "dasavadharam" padaththin isai veLiyeetu vizhavai Sun TVil paarthen.

Adhil kalaignarai enna solli arimugam seidhargal theriyuma?

"Tamizh thiraiulagai kakkum kadavuL!"

Naathigam pesum kalaignar kadavule aagivittar!

Kadavulai nambuvadhai vida manidhanaiye nambu endru sonnavarukke indha gadhi!

Kalaignarukku enadhu aazhnda anudhabangal.