நேரம் போவதே தெரியவில்லை. திரும்பி பார்க்கும் முன்னே இன்னொரு புது வருடம் பிறந்து விட்டது!
என் இரண்டடு கண்மணிகளும் அழகாக அலங்காரம் செய்து கொண்டு புது வருடத்தை வரவேற்றனர். சங்கீதாவும் சமயலறையில் ஒரு "marathon" நடத்தினாள். அருமையான சாப்பாட்டை ருசித்ததில் எனக்கு குறைந்த பட்சம் ஒரு 4-5 பவுண்டு கணம் கூடி இருக்கும். அதை சரிகட்ட, எப்போதும் போல 90 நிமிடம் யோகா செய்வதற்கு பதிலாக மூன்று மணி நேரம் யோகா செய்தேன்.
ஒரு வாரம் வெளிஊர் பயணம். 13 மணிநேரம் விமான பயணம். ஏற்கனவே சின்ன சைஸ் சீட்டில் உட்கார்ந்திருக்கும் என் பக்கத்தில் ஒரு பெரிய மனிதன். பெரிய என்று சொன்னது அவரது சரீரத்தை! அவர் அந்த சீட்டில் உட்கார்ந்தார் என்று சொல்லுவதை விட சீட்டில் படர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். முதுகு வலி பின்னி விட்டது! போயிங் 74(+)7 மற்றும் Airbus விமானம் செய்வோர்க்கு ஒரு சிரிய விண்ணப்பம்! தயவு செய்து இரு சீட்டுகளுக்கு நடுவே உள்ள தடுப்பை நகற்ற முடியாமல் பண்ணி விடுங்கள். ஒல்லி குச்சியாக இருக்கும் எனக்கே இவ்வளுவு பிரச்சனை என்றால், அவருக்கு என்னை விட கஷ்டமாக இருந்திருக்கும். பாவம்! வழக்கம் போல, எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்..
திரும்ப விஷயத்துக்கு வருவோம். புது வருட பிரப்பு ! குழந்தைகள் அழகாக அலங்காரம் செய்து கொண்டாடினார்கள். புது வருடத்தை முன்னிட்டு நான் ஒரு "Bose Ear Phones"-ஐ எனக்கே அன்பளிப்பாக கொடுத்தேன்! அடுத்த விமான பயணத்தின் பொது, உட்கார இடம் இல்லை என்றாலும் சத்தமாவது குறையும்! Bose'க்கும் புது வருடத்துக்கும் என்ன சம்பந்தம் என்று என்னை கேட்காதீர்கள்! விநாயக சதுர்த்திக்கும் "Run" படத்திற்கும் என்ன சம்பந்தமோ, அதே சம்பந்தம் தான்!
இதில் உண்மையாக கொண்டாடக்கூடிய விஷயம் என்னவென்றால், என் குட்டீஸ் இன்றும் நான் கெஞ்சி கேட்டால், போடோவுக்கு போஸ் குடுக்க தயாராக இருக்கிறார்கள்!
சின்னவளின் தோடுகளை காட்டியே ஆகவேண்டும்!சங்கீதாவின் நண்பன் இந்தியாவிலிருந்து வாங்கி வந்த "டெர்ர கோட்டா" தோடுகள்!
இந்த படங்களை பார்க்கும்போது, நான் ஒரு போட்டோவிலும் இல்லையே என்று ஒரு ஏக்கம்! வரும் சில நாட்களில் ஓரிரண்டு எடுத்தால் போச்சு!
அனைவருக்கும் எங்களுடைய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கு சாந்தமும் சந்தோஷமும் நிரம்பிய புது வருடத்திற்கான மனமார்ந்த வாழ்த்துக்கள்!
(English Version is here)