media

தமிழில் எழுதும் சந்தோஷம்

எல்லோருக்கும் வணக்கம்! நான் தமிழில் எழுதி பல வருடங்கள் ஆகின்றது. முதலில் PC'ஐ உபயோகித்து கொண்டு இருந்தேன். அப்போது "Baraha" மூலம் எளிதாக தமிழில் எழுதமுடிந்தது. புதிய வேலை. புது கம்ப்யூட்டர். Mac'இல் Baraha வேலை செய்யவில்லை.  அதோடு தமிழில் பிளாக் எழுதுவதும் நின்றுவிட்டது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு தமிழ் புத்தகத்தை படித்தேன். மறுபடியும் தமிழில் எழுதவேண்டும் என்று தோன்றியது.  Google  உள்ளீட்டு கருவியால் இதை எழுதுகிறேன். இப்படி ஒரு கருவி இருப்பது தெறியாமல் போனது! இதை சுட்டிக்காட்டியதற்கு ஸுஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றி! 
கடந்த நான்கு ஆண்டுகளில் நான் ஐம்பது முறை சீனா சென்று வந்துள்ளேன். வெறும் விமானம், ஏர்போர்ட், ஹோட்டல், அலுவுலகம் மட்டுமே பார்த்திருந்தேன். இருந்தாலும் பலவித மக்களோடு பேசி பழுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல புது நண்பர்கள். சீனாவை பற்றி அமெரிக்காவில் பேசப்படும் சம்பவங்கள், நியூஸ், முக்கால் வாசி பொய் என்று உணர்ந்தேன். இந்தியாவை போல சீனாவும் பெரிய நாடு. அங்கும் பல மாநிலங்கள். நமக்கு எல்லோரும் சீனராக தெரிந்தாலும், அவர்களுக்கு வேறுபாடுகள் பெரிதாக தெரிகிறது. ஒரு உதாரணம்... ஒரு இந்தியா ரெஸ்டூரண்ட்டுக்கு என்னோடு வேலை பார்ப்பவர்களை அழைத்து சென்றேன். அங்கே எங்களுக்கு வந்த Waitress கிட்டத்தட்ட ஆறு ஆடி  உயரமாக இருந்தாள். உடனே என் நண்பன் அவளை கேட்ட கேள்வி? "நீ வடசீனாவிலிருந்துதானே வந்திருக்கிறாய்? எந்த பிரதேசம்?" அதற்கு அவள் "இல்லை, நான் ஷாங்காய்யை சேர்ந்தவள் தான்!" என்றாள். எனக்கு எல்லாரும் ஒரே சீனர்களாகத்தான் தெரிந்தார்கள். இந்த பயணங்களில் வேலை ஒருபுறம். சீனாவை பற்றி பல விஷயங்கள் தெரிந்துகொள்வது மறுபுறம். 
நான் நினைத்ததுபோல சீனாவில் எல்லோரும் எப்போதும் அரசாங்கத்துக்கு பயந்து வாழ்வதில்லை! மக்கள் நகரங்களில் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். என்னோடு வேலை பார்க்கும் நண்பர்களின் பெற்றோர் கிராமத்தில் இருக்கிறார்கள். அவர்களும் சந்தோஷமாக இருப்தக தெரிகிறது. அவர்களது பெரிய அனுதாபங்கள்? 
1. ஒரு குழந்தை மட்டுமே பெற்றுகொள்ள முடியும் என்ற அரசாங்க கட்டுப்பாட்டினால், தன்  ஒரே குழந்தையை விபத்திலோ, போரிலோ, அழகா மரணத்திலோ இழந்தவர்கள், முதுமையில் அவர்களை கவனிக்க யாரும் இல்லாமல் கஷ்டப்படுவதாக தெரிகிறது. இதில் பல பெற்றோர் முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளார்கள். அப்போது சீனாவில் புகைபிடிப்பது உடல் நலத்துக்கு கெடுதல் என்று மக்களுக்கு பரவலாக தெரியவில்லை. இப்போது புற்றுநோய் பலரை பாதிக்கிறது. ஆஸ்பத்திரியில்,புற்றுநோய் சிகிச்சைக்கான யந்திரங்கள் இருபத்துநாலு மணி நேரமும் ஓடுவதாக கூறுகிறார்கள்! 
2. இளைய (நடு தலைமுறை- Gen -X ) தலைமுறை முழுதும் கம்யூனிஸ்ட் புரட்சிக்கு பின், 4-5 வருடங்கள் சீரான கல்வி இல்லாமல் இருந்து அதன் பிறகு படித்து, இப்போது வாய்ப்புக்காக நகரங்களில் சென்று குவிந்துள்ளார்கள். வருடத்திற்கு இரு முறை (கோல்டன் வாரம், சீன புத்தாண்டு வாரம்) மட்டுமே கிராமத்திற்கு சென்று பெற்றோருடன் பழகும் வாய்ப்பு. இதில் பலருக்கு அவர்களின் பெற்றோரின் நண்பர்கள் குழந்தைகள்தான் தம்பி தங்கை, அண்ணா அக்கா. 
3. இப்போது சீனா அரசாங்கம் இந்த ஒரே குழந்தை கட்டுப்பாட்டை ரத்து செய்துள்ளது. அதில் சிலருக்கு மன வருத்தம். 
4. காற்று மற்றும்  தண்ணீர் சுத்தம் அவ்வப்போது கேள்வி குறியாக உள்ளதாகவும், அரிசியல் அதிகாரிகள் வருவதற்கு முன்பு அனைத்து அலைகளையும் நான்கு நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்போது திடீர் என்று நீலமான வானம், வானத்தில் மேகம், இதெல்லாம் பார்க்கும் போது இதை மாற்ற பொது மக்களால் என்ன செய்யமுடியும், ஏதாவது செய்ய முடியுமா? என்ற ஏக்கம்.. 
இந்த நான்கு விஷயங்களை தவிர அவர்கள் வேறெதைப்பற்றியும் புலம்புவதில்லை. 
என் சீன நண்பர்கள் பெருமிதப்படும் விஷயங்களும் பல ..
1. ஆண்டுக்கு ஆண்டு, தினசரி வாழ்க்கை அவர்களுக்கு எளிதாவது எல்லோருக்கும் தெரிய வருகிறது. ஒன்பதே மாதங்களில் புது "highway". ஒரே வருடத்தில் புது ரயில் ஸ்டேஷன், அதிவேகமான இன்டர்நெட், பெட்டி கடையிலிருந்து பெரிய மால் வரை எல்லோரும் போனிலேயே "Alipay" உபயோகித்து சாமான் வாங்குவது..
2. மருத்துவ மனைகளில் உள்ளே சென்று வெளியே வரும் நேரம் குறைந்துள்ளது...மருந்து என்ன விலையானாலும் அவர்களுக்கு சலுகை விலையில் கிடைப்பது
3. சீனாவை மத்த நாடுகள் ஒரு சூப்பர் பவராக மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிற பெருமிதம்!
இதை எல்லாம் கேட்கும்போது நான் நினைப்பது?
என் அம்மா சொன்னது "சென்னையில் சில தெருக்களில் முதியோர் மட்டுமே உள்ளனர். குழந்தைகள் எல்லோரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என்று எங்கெங்கோ போய் விட்டார்கள். summer  vacation  பொது மட்டும் தெரு காலைகட்டி இருக்கிறது."
அமெரிக்காவில் வயதானவர்களுக்கும் இதே கதி தான்! சீனாவில் நடப்பது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். அமெரிக்காவில் சின்ன உபாதை வந்தால் மருத்துவ செலவு சமாளிக்க முடியும். பெரியநோய் ஏதேனும் வந்தால் குடும்பமே தெருவுக்கு வரும் வாய்ப்பு அதிகம்!
அமெரிக்கா, சீனா, இந்தியா.. இந்த மூன்று நாடுகளிலும் இப்போது "nationalism" தலைதூக்கியுள்ளது. இதில் சீன மற்றும் அமெரிக்காவில் "protectionism" சேர்ந்து காணப்படுகிறது!
இது எங்கே பொய் முடியும் என்று எல்லோருக்கும் தெரியும்!  
அண்மையில், விமான பயணங்களில் நான் படம் பார்ப்பதை விட்டுவிட்டு புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டேன். வரலாறு, மானுடவியல், பொருளாதாரம் போன்ற தலைப்புகளை மையமாக கொண்ட புத்தகங்கள். இந்த புத்தகங்களில் எல்லாம் சில கோட்பாடுகள் பலமுறை குறிப்பிட படுகின்றன. 
அதை அடுத்த போஸ்ட்டாக எழுதுகிறேன்..