சிங்கார சென்னை..
போன மாதம் சென்னையில் 14 நாட்கள்! இந்த இரண்டு வாரங்களில் பல அனுபவங்கள், அனுதாபங்கள்.
மனைவியின் தாத்தா பாட்டி "சதாபிஷேகம்". சந்தோஷமான சூழ்நிலை. முதல் சில நாட்கள் பொனது தெரியவில்லை!
அம்மா முட்டி உடைந்து போய், அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்தார். அத்தனை வலியிலும், எங்களுக்காக, பேத்திகளுக்காக சிரித்து கொண்டு இருந்தார். எனக்கு சந்தோஷம், சோகம், வியப்பு, கவலை. வார்தைகளில் சொல்ல முடியாத மனக்கலவரம்.
அம்மா ஆசைக்காக சின்னவளுக்கு "ஆயுஷ் ஹோமம்" செய்தோம்! செய்த அன்று இரவே அமெரிக்கா திறும்பினோம் !
சென்னை மாநகரம் சிங்காரமாகத்தான் உள்ளது! எனக்கு தான் அவ்வப்போது "சோக கன்னாடி" மூலம் பார்பது போல ஒரு பிரமை!