என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சி "ஒரு வார்த்தை, ஒரு லட்சம்"
இருவருக்கும் அந்த நிகழ்ச்சியில் வரும் பெரும்பாலான வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாது. இருந்தாலும் மும்முரமாக பார்பார்கள். இருபது வார்த்தைகளில் ஒன்றிரண்டு தெரிந்தாலும் அவர்களுக்கு ஒரு அலாதியான சந்தோஷம்!
அதுவும் கலிபோர்னியா தமிழ் அகாடமியில் வருடம் தோறும் ஞாயிற்றுகிழமை அன்று தமிழ் கற்று கொள்வதின் ஒரு நோக்கம்? இந்த நிகழ்ச்சியில் வரும் வார்த்தைகள் தெரிகிறதா என்று பார்ப்பது!
ஆங்கிலத்தில் "தபூ" என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. நாங்கள் குடும்பமாக ரசித்து விளையாடும் "கேம்". தமிழிலும் அதே போல ஒரு விளையாட்டு இருந்தால்....
கடந்த இரு வாரங்களாக நாங்கள் "one word one million" என்று ஒரு கேம் விளையாட ஆரம்பித்து இருக்கிறோம். கூடிய சீக்கிரம் அதை வீடியோ ப்ளாக் செய்கிறேன்!